நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சங்கத்துக்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 502 மூட்டை பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். பல மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ₹7900க்கும், மட்டரக பருத்தி ஒரு குவிண்டால் ₹4499க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹12லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
₹12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
previous post