உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காயம் அடைந்த உக்ரைன் ராணுவ வீரர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஹோஸ்டோமல் மற்றும் இர்பின் ஆகிய நகரங்களில் ரஷ்யப் படைகளை எதிர்த்து போரிட்ட போது ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, விரைவில் நலம் பெற வாழ்த்தினார்.