சிவகாசி, ஜூலை 17: திருத்தங்கலில் மாநில பள்ளிகள் அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி ஆர்.எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குண்டு எறிதல் போட்டியில் பிளஸ்-1 மாணவி ஹா மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.
9-ம் வகுப்பு மாணவி ஷாமலா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். சாதனை மாணவிகளை பள்ளியின் தலைவர் சண்முகையா, முதல்வர் முத்துலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.