தூத்துக்குடி: தூத்துக்குடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி ராஜிவ்நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (56). இவர், தூத்துக்குடி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் படித்து வரும் 10 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …