மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக நாரி சக்தி விருது தரப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஜெயா முத்து, தோடா கைபின்னல் கலைஞர் தேஜம்மாவுக்கு நாரி சக்தி விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்தை சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ஆய்வாளரான ரங்கசாமி சக்தி விருது வழங்கப்பட்டது.