திருவண்ணாமலை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாசி மாத பவுர்ணமி இன்று (15ம் தேதி) இரவு 10.30 மணிக்கு தொடங்கி நாளை (16ம் தேதி) இரவு 11.30 மணிக்கு நிறைவடைகிறது. ஆனால் இந்த மாதமும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். …