சென்னை : தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை கிண்டி ,குரோம்பேட்டை பொறியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது….