ஆவடி: அம்பத்தூர் சண்முகபுரம் இந்திராநகர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (29). குடிப்பழக்கம் உடையவர். இவர், புழல் அருகே கதிர்வேடு பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நாகேஷ்வரி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சந்தோஷ், குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளார். தந்தை ஜெகநாதன் சந்தோஷை கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்….