டெல்லி: டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வணிக வளாகங்கள், பணியிடங்களில் மாஸ்க் அணியாவிடில் அனுமதிக்க கூடாது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்டால் 200 நபர்களுக்கு மேல் விருந்துகளில் பங்கேற்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. …