Sunday, October 6, 2024
Home » சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரஹ்மான்

சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரஹ்மான்

by kannappan

சென்னை: அசைவ பிரியரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சைவத்துக்கு திடீரென மாறியுள்ளார். விக்ரம் நடிக்கும் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படங்கள், அடுத்தடுத்து வெளியாக உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பொன்னி நதி என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானே இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில் ரஹ்மான் போட்ட டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்’ என குறிப்பிட்டு தட்டில் இருக்கும் சைவ உணவை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். அசைவ பிரியரான ரஹ்மான், திடீரென சைவத்துக்கு மாறியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் மொஹரம் நாளைக்கு முந்தைய 10 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவாராம். வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மொஹரம் தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் தான் அவர் தற்போது சைவத்து க்கு மாறி உள்ளாராம்….

You may also like

Leave a Comment

7 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi