சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101.50 உயர்ந்து ரூ.2,243.50க்கு விற்பனையாகிறது. கடந்த ஓராண்டில் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.770 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு, டீ, காபி விலை உயர வாய்ப்புள்ளது….