சென்னை: சூர்யா தயாரிக்கும் இந்தி படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய படம் சூரரைப் போற்று. இந்த படம் ஓடிடியில் வெளியானது. இதை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கரா, இந்தியிலும் இயக்க உள்ளார். ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது….