Sunday, September 29, 2024
Home » கொரோனா விதிமுறைகள் மீறல்!: சென்னையில் மலையாள ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்துக்கு அதிகாரிகள் சீல்..!!

கொரோனா விதிமுறைகள் மீறல்!: சென்னையில் மலையாள ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்துக்கு அதிகாரிகள் சீல்..!!

by kannappan

சென்னை: கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய மலையாள ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் உச்சமெடுத்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரசுக்கு இலக்காகி வருகின்றனர். நோயாளிகள் வருகை அதிகரிப்பால் மருத்துவமனைகள் திணறி வருகிறது. படுக்கை வசதி இல்லாமல் பலர் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. 
இத்தகைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்திய படப்பிடிப்பு தளத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் மலையாள ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அங்கு தொடர்ந்து ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர். 
இதனால் ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு குழுவினரின் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். 
அப்போது, கொரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பை நடத்தியதற்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள், பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

You may also like

Leave a Comment

16 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi