சென்னை: மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கூடுதல் தடுப்பூசிகளை பெற தனியார் மருத்துவமனைகள் கோவின் செயலியில் பதிவு செய்யவேண்டும். தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் வழிகாட்டுதல்களை பெற 0120-4473222 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது….