திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை மெயின் ரோட்டில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், எம்.பியுமான ராமலிங்கம் தலைமை வகித்தார். ஆடுதுறை பேரூர் செயலாளர் கோ.சி. இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது, ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, அம்பிகாபதி, மிசா மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். உதவி பொறியாளர் ஆய்வு
கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
previous post