மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் செயல்படும் கடைகளுக்கு சென்ற மருத்துவ குழுவினர் அதன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று செய்தனர். டாக்டர் அனுஜோதி, சுகாதார துறை ஆய்வாளர் மாரியப்பன், படாளம் இன்ஸ்பெக்டர் சரவணன், புக்கத்துறை விஏஓ ரூபா உள்பட பலர் கலந்து கொண்டு கடைகளில் இருந்த 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், நெல்வாய் கூட்ரோடு பகுதியில் உள்ள காளான் கம்பெனியில் பணியாற்றும் சுமார் 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், டாக்டர் ரம்யா, சுகாதார ஆய்வாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
கடைக்காரர்களுக்கு ெகாரோனா பரிசோதனை
previous post