திருப்பூர்: திருப்பூர், புஸ்பா தியேட்டர் பகுதியில் எெலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் எெலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். நேற்று புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள செல்போன் ஷோரூம் முன்பு எெலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அப்போது ஸ்கூட்டரின் பின்புறத்தில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று எெலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றிய தீயை அணைத்தனர். பேட்டரி பகுதியில் தீ பற்றியதால் உடனடியாக பேட்டரியை அப்புறப்படுத்தினர்….