புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.37 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.26 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 45,083 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,95,030 ஆக உயர்ந்தது.* புதிதாக 460 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,37,830 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,840 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,88,642 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,68,558 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 97.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.10% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் இதுவரை 63,09,17,927 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….