திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கம், ஒன்றியக்குழுத் தலைவர் அறை ஆகிய இடங்களில் அம்பேத்கர் படம் அமைக்க வேண்டும் என பையனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமிதா முத்துக்குமார் திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மனிடம் கோரிக்கை வைத்தார். அதன்பேரில், திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழுத் தலைவர் அறை மற்றும் மன்றக் கூட்ட அரங்கம் ஆகிய இடங்களில் அம்பேத்கர் பட திறப்பு விழா நேற்று நடந்தது. 2 அம்பேத்கர் படங்களையும் திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்ஆர்எல் இதயவர்மன் திறந்து வைத்தார். அவருக்கு பையனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமிதா முத்துக்குமார் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்….