சுரைக்காய் ஸ்பைசி பச்சடி

தேவையானவை

தோல் சீவி துருவிய சுரைக்காய் – 200 கிராம்
உப்பு – தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை –
சிறிது
பச்சைமிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கெட்டித் தயிர் – 300 மி.லி.
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து துருவிய சுரைக்காய், வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கி உப்பு கலந்து இறக்கவும். ஆறியதும் தயிருடன் கலந்து பரிமாறவும்.

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி