யூடியூபர் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: யூடியூபரான டிடிஎப்.வாசன், சில தினங்களுக்கு முன் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றபோது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போன் பேசியபடியே கார் ஓட்டும் வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, விசாரணைக்காக நேற்று முன்தினம் ஆஜரான வாசனை மதுரை, அண்ணாநகர் போலீசார் கைது செய்து மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர் மன்னிப்பு கோருவதாக வக்கீல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி, இனிமேல் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட மாட்டேன் என உறுதிமொழி அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், தினசரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.

 

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்