யூடியூபர் வாசன் செல்போனை நாளை ஒப்படைக்க உத்தரவு

மதுரை: யூடியூபர்டிடிஎப்.வாசன், கடந்த மே 15ம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே செல்போன் பேசியபடி, வேகமாக, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியதாக மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து, மே 29ம் தேதி கைது செய்தனர்.

அவருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. செல்போன் மற்றும் ஓட்டுநர் உரிம ஆவணங்களுடன் விசாரணைக்கு ஜூன் 3 (நேற்று) காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக அண்ணாநகர் போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று காலைஆஜரான வாசன், செல்போன் மற்றும் ஆவணங்கள் சென்னையில் உள்ளதால், அவற்றை ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கேட்டார். அதனை ஏற்ற போலீசார் நாளை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு