பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்; காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு..!!

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனை 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் ஸ்டென்ட் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்.

விபத்தை தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது நேற்று பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்திருந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றது.

நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை டி.டி.எஃப். வாசனை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அச்சமயம், யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது