யுடியூபர் சங்கர் மீது சட்டபூர்வ நடவடிக்கை: ஏஐடியூசி உழைக்கும் பெண்கள் அமைப்பு வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய உழைக்கும் பெண்கள் அமைப்பின் (ஏஐடியூசி) அமைப்பாளர் வஹிதா நிஜாம் நேற்று வெளியிட்ட அறிக்கை: யூடியூபர் சங்கர் பெண்களின் கவுரவத்தை பங்கப்படுத்தும் நோக்கத்தோடு கீழ்த்தரமாக பொதுவெளியில் பேசிவருகிறார். அவர் மீது கோவை காவல்துறை சைபர் குற்றவியல் பிரிவு தமிழ்நாடு பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் தடுப்புச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 353, 509, 294/61 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளது. பெண்களின் கவுரவத்தை குலைப்பது மற்றும் ஆத்திரமூட்டும் நோக்கத்தில் தொடர்ந்து அவதூறு பேசி வரும் சங்கருக்கு எதிராக உடனே சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்