யூடியூபர் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் 2வது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனை விதித்து வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை: தொடரும் அட்டூழியம்

சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை