யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யூடியூபர் சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக யூடியூபர் சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், யூடியூபர் சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தன் மீது பதியப்பட்டுள்ளது. சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எம்பிக்கள் இருக்கையில் உள்ள மைக் ஆப் செய்யும் சுவிட்ச் என்னிடமில்லை: மக்களவை சபாநாயகர் தகவல்

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் 3 ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும்: அமித்ஷா அறிவிப்பு