யூடியூப் கிரியேட் !

வீடியோக்கள் மூலம் யூடியூபில் வருமானம். இதுதான் தற்போது உலகின் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் தளம் எனலாம். ஆனாலும் இதில் வருமானம் ஈட்டுவது அவ்வளவு சுலபம் அல்ல. வீடியோக்களை சரியான முறையில் பதிவுசெய்து, அதை எடிட் செய்து, சரியான இசைகோர்ப்புகளுடன் பதிவிடும் போதுதான் அதற்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். கணிசமான வருவாயும் கிடைக்கும். அதற்குத்தான் உதவுகிறது யூடியூப் கிரியேட் செயலி. வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது யூடியூப் கிரியேட் (YouTube Create) எனும் செயலி. சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் நிறுவனமே இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இசை உரிமைப் பிரச்னைகள் கூட இல்லாமல் இந்தச் செயலியே இலவச இசைகளைக் கொடுக்கிறது. இதனால் பயனாளர்களும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

Related posts

அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு