யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு

சென்னை: யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறை வகுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என கூறி, சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.அதில், குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, யூடியூப் நிறுவனத்தையும், ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் ஒன்றிய அரசை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது