யூடியூப் சேனல்களை முறைப்படுத்த நடைமுறைகள் வகுக்க கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிவதிலும், விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது