இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்து பாஜ பரப்பும் வேலையில்லா திண்டாட்ட நோய்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாஜவால் பரப்பப்பட்ட வேலையில்லா நோய் அரியானா இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பாதுகாப்பையும் ஆழமான ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இன்று வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா இருக்கிறது.

இதற்கு காரணம் ஒரு தசாப்தத்தில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒவ்வொரு அமைப்பின் முதுகெலும்பையும் பாஜ உடைத்துவிட்டது. தவறான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் மூலம் சிறு வணிகங்களின் முதுகை பாஜ உடைத்துவிட்டது. அக்னிவீரர் திட்டம் மூலம் ராணுவத்துக்கு தயாராகும் இளைஞர்களின் உற்சாகத்தை பாஜ சீர்குலைத்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு