இளைஞரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில் டிக்கெட் பரிசோதகர்களை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் அதிரடி

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் கன்னத்தில் அறைந்த ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடை மேடை முடியும் இடத்தில் நேற்று காலை வட மாநில இளைஞர் ஓருவர் நின்றிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரிடம் பிளாட் பார்ம்டிக்கெட் கேட்டார். அந்த இளைஞரோ தான் ரயில்வே எல்லையை ஓட்டிய பகுதியில் தான் நின்றதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார். அதற்கு அந்த வாலிபர், நான் நடைமேடையில் வரவில்லை.

பாலத்தின் அருகே தான் நின்றேன் என்று இளைஞர் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, இது எங்க ஊரு நான் இந்தி பேச முடியாது எனக்கூறியதோடு, ஒருமையில் பேசி ஆவேசமாக எழுந்து அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தார். ரயில் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து, ரயில்வே போலீசில் எந்த புகாரும் இல்லை. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில் டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, வேடிக்கை பார்த்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பெண் டிக்கெட் பரிசோதகர் அநாகரிகமாக நடந்து கொண்ட வீடியோ வைரலானதை அடுத்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

சிறுமியை கடத்தி பலாத்காரம்: 3 பேர் கைது

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு: கேரள அமைச்சர் கே.ராஜன் குற்றசாட்டு