திருவாலங்காடு ஒன்றியத்தில் இளம் பெண் மாயம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் இளம் பெண் மற்றும் வாலிபர் மாயம் அடைந்துள்ளனர். திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி ஊராட்சி எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் மலர்விழி (27). இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த சில மாதங்களாக மலர்விழி தாய் வீட்டில் வசித்துவந்தார். மலர்விழி நேற்றுமுன்தினம் காலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதேபோல், திருத்தணி அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த அரிசந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஷா என்பவரது மகன் உம்மத் பாருக் (22). இவர், நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை. மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்தும் புகாரின்படி திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடுகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி