செல்போனை ஹேக் செய்து வீடியோ காலில் இளம்பெண் நிர்வாணமாக தோன்றி தமிழக காங். நிர்வாகிக்கு மிரட்டல்: பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவரின் செல்போனை ஹேக் செய்து, இளம்பெண் நிர்வாணமாக வீடியோ காலில் வந்துள்ளார். அதனை வைத்து மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டியது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம் (45). சேலத்தை சேர்ந்த இவர், பெங்களூரு பழைய விமானநிலைய சாலை கொடிஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், முந்தைய நாள் தனது சொல்போனின் வாட்ஸ்அப் வீடியோ கால் பெல் அடித்தது. யார் அழைக்கிறார் என பார்க்க எடுத்தபோது, அதுவாகவே ஆன் ஆகியது. அடுத்த சில நொடிகளில் திரையில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றினார். உடனே போனை ஆப் செய்துவிட்டேன். அதன்பின், எனது மொபைலில் சமூக வலைதள கணக்கில் இருக்கும் புகைப்படங்களை மர்மநபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே எனது போனை ஹேக் செய்து, மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

இப்புகார் பற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமாரமங்கலத்தின் செல்போனை ஹேக் செய்தது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியை சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு