யோகா என்பது உடற்பயிற்சி அல்ல.. வாழ்க்கை நெறிமுறை: பிரதமர் மோடி உரை

நியூயார்க்: யோகா என்பது வாழ்க்கை நெறிமுறை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று நள்ளிரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூயார்க் ஜ.நா. சபை தலைமையகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஐக்கியநாடுகள் சபை தலைவர் கசபா கொரேஷி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நடிகர் எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கண்ணா, ஜெய் ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி; யோகா என்றால் ஒன்றிணைவது; அனைவரும் ஒன்றிணைவது யோகாவின் மற்றோரு வடிவத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகா உலகலாவியது. ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்று கூடுவதை பார்ப்பது அபூர்வமானது. இது ஒரு உடற்பயிற்சி அல்ல, யோகா என்பது வாழ்க்கை நெறிமுறை, சீரான வாழ்க்கையை தரக்கூடியது. தன்னுடனும், மற்றவர்களுடனும், இயற்கையுடனும் இணக்கமாக வாழ ஒரு வழி.

யோகாவை தனி நபராகவோ, குழுவாகவோ சேர்ந்து செய்யலாம் சிறுதானியங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. சிறு தானியங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி இவ்வாறு கூறினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு