சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..!!

 

ஸ்ரீநகர்: 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குடன் கூடிய இந்த பிரகடனம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69-வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஶ்ரீநகரின் எஸ்கேஐசிசி-யில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார்.

யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா” என்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும். “நாட்டு மக்களுக்கும் உலகின் ஒவ்வொரு மூலையில் யோகா செய்பவர்களுக்கும் வாழ்த்து 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்தை நான் முன்மொழிந்தேன்; சர்வதேச யோகா தினம் 10ஆண்டு வரலாற்றை நிறைவு செய்துள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுள்ளார்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி