ஏற்காட்டில் கோடை விழா தொடங்கியது

சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. வேளாண் துறை முதன்மை செயலாளர் அபூர்வா ரிப்பன் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவை முன்னிட்டு, ஏற்காடு ஏரி மற்றும் அண்ணா பூங்கா முன்பு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்காட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் கண்காட்சி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பூக்களால் ஆன பல்வேறு உருவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்காக செல்பி பாயின்ட்களும், பூக்களால் ஆன அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காட்சி அரங்கில், ரோஜா, ஜினியா, டேலியா, ஜெர்பெரா, டெல்பீனியம், ஸ்னாப் டிராக்கன் உள்பட 30 வகையிலான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 5.50 லட்சம் மலர்களால் ஆன பல்வேறு உருவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறை சார்பில் ஏற்காடு ஏரியில் படகுப்போட்டி நடந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பரிசுகளை வென்றனர். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுத்தனர். இதனால், அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பின. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 3 இடங்களில் தானியங்கி மஞ்சள் பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்