ஏற்காட்டில் இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்காடு: ஏற்காட்டில் மலர் கண்காட்சியை காண இறுதி நாளான இன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை மற்றும் பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு படையெடுத்து வந்து மலர் கண்காட்சியை கண்டு களித்தனர்.

கோடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தாலும் மலர் கண்காட்சி மட்டும் இன்று வரை நீட்டிக்கப் பட்டது. இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் அண்ணா பூங்கா, படகு இல்லம், காட்சி முனை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதமான சீதோஷ்ணம் காணப்பட்ட நிலையில், ஏரியில் குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா