ஏமனில் அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஹவுதிகள் தகவல்

துபாய்: ஏமனில் அமெரிக்க டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதைடுத்து நேற்று முன்தினம் ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரின் மீது நேற்றுமுன்தினம் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் கரீஷ் இயற்கை எரிவாயு வயல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் நேற்று தெரிவித்தனர். மேலும் அமெரிக்காவின் எம்கியூ- 9 ரீப்பர் வகை நவீன டிரோன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று ஹவுதிகளின் தொலைக்காட்சியான அல் மசீரா தெரிவித்துள்ளது.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது