இந்த வருடம் என்ன டிரெண்டிங்

அலியா கட் சல்வார்கள்!

‘அலியா கட் குர்தா, அலியா கட் சல்வார்… சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஃபேஷன் விற்பனை கணக்குகள், சமூக வலைதள ஃபேஷன் விரும்பிகள் என எங்கும் டிரெண்டிங் இந்த அலியா கட் சல்வார்கள்தான். மேல் மார்பகப் பகுதியில் ஒரு ‘வி’ கட், இடைப்பகுதியில் ஹை வெய்ஸ்ட் கட் என இப்போது அதிகம் டிரெண்டிங்கில் இருக்கும் சல்வார்கள் இவைதான். ‘இந்தக் குர்திகளின் கட் பொதுவாகவே முன்பக்கம் சற்று மேலே உயர்ந்து, பின்பக்கம் சற்றே கீழே இறங்கி வரும், இதுதான் இதனுடைய ஸ்பெஷல். சென்ற வருடம் அலியா பட் இந்த கட் குர்திகளில் நிகழ்ச்சிகளில் அதிகம் தென்பட்டார். குறிப்பாக அவர் கருவுற்ற நேரம் என்கிறதால் இந்த டைப் குர்தாக்கள் அவர் வயிற்றை நன்கு மறைத்துக் காண்பித்தது. மேலும் ஒல்லியாகவும் உடலைக் காட்டக் கூடிய வகை குர்தாக்கள் இவை. இந்த அலியா கட் இந்தப் பெயர் இப்போதான் டிரெண்டிங் பெயர்.

செலிபிரிட்டி சாய்ஸ்!

முன்பெல்லாம் நடிகர்கள், நடிகைகள் எந்த உடை அணிந்தாலும் அதை அப்படியே காபி செய்ய பல ஆயிரங்களை அள்ளி இரைக்க வேண்டும். ஆனால் இப்போது நிலமையே வேறு. எந்த நடிகை என்ன உடை அணிந்தாலும் அந்தப் படத்தின் அல்லது நடிகர், நடிகையின் பெயரைத் தட்டினாலே அதிகபட்சம் ஒரு மாத காலத்தில் ஆன்லைனில் வந்துவிடுகின்றன. அப்படி இந்த வருடம் அதிகம் டிரெண்டிங் மங்கையாக வந்தவர் அலியா பட் அவரது உடைகள், சேலைகள்தான். அதிலும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி‘ படத்தின் அவர் அணிந்திருந்த அத்தனை புடவைகளும் டிரெண்டிங் ரகம்.

படா பெல்ட்!

சினிமா நடிகைகள், மாடல்கள் மட்டுமே கடந்த சில வருடங்களாகப் பயன்படுத்தி வந்த இந்த அதீத வேலைப்பாடுகள் அடங்கிய பெல்ட்கள் பொருத்தப்பட்ட சல்வார், லெஹெங்கா மற்றும் சேலைகள் என இந்த வருடம் நம் வீட்டுப் பெண்களுக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் இவைகள் ரூ.700 முதலே ஆன்லைன் மற்றும் ஜவுளி கடைகள் என எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒட்டியானம் பாணி அட்டாச்மெண்ட். இதனை சில டெய்லர்கள், டிசைனர்களும் கூட உடையில் மிஞ்சிய துணியில் அழகாக டிசைன் செய்து தருவதையும் காண முடிகிறது.

கொரியன் காலணிகள்

சமீபத்திய 2கே கிட்ஸ்களின் சாய்ஸ் இந்த கொரியன் காலணிகள்தான். அதாவது கால்களைச் சின்னதாகக் காட்டும் பாணியிலான ஷூக்கள், அல்லது கால்களுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் பெரிய சைஸில் அணியப் படும் ஸ்னீக்கர்கள். போலவே எந்த ஃபிளாட் அல்லது ஜஹீல் செருப்பானாலும் முன்பக்க அரை வட்ட வடிவத்துக்கு பதில் சதுரமாக அல்லது கால் விரல்களின் முனைகளை ஒத்த காலணிகள் அணிவதும் டிரெண்டாகியிருக்கிறது.

பூப்போட்ட சட்டை

சென்ற வருடம் முதலே இந்தப் பூப்போட்ட சட்டைகள் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளன. உடன் கடந்த சில வருடங்களாகவே ஆண்கள், பெண்களுக்கு நிகராக பின்க், ஆரஞ்ச், மஞ்சள் எனப் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்துள்ளது. அதே போல கிராப் பேண்ட் மற்றும் லோஃபர்களும் தொடர் டிரெண்டிங்தான்.
– கவின்

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு