யானைமலையில் உள்ள குவாரியை சுற்றி கம்பிவேலி – தமிழ்நாடு அரசு

மதுரை: மதுரை யானைமலை அடிவாரத்தில் பயன்படுத்தப்படாத குவாரியை சுற்றி கம்பிவேலி அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை யானைமலை அடிவாரத்தில் செயல்படாமல் உள்ள குவாரியை சுற்றி கம்பிவேலி அமைத்து கண்காணிக்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. பயன்படுத்தப்படாத குவாரியை சுற்றி கம்பிவேலி அமைத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இத்தகைய கேள்விக்கு அரசுத்தரப்பில் கூறியதாவது, குவாரியை சுற்றி ரூ.30 லட்சத்தில் கம்பிவேலி அமைக்க ரூ.30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மதுரை ஆட்சியர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை  ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு