யமஹா பேசினோ எஸ்

யமஹா நிறுவனம் பேசினோ ஸ்கூட்டர் வரிசையில் எஸ் என்ற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் பிற பேசினோ ஸ்கூட்டர்களில் உள்ள 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.2 எச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய வேரியண்டில் ‘ஆன்சர் பேக்’ என்ற வசதியை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. யமஹா ஸ்மார்ட் மொபைல் ஆப்ஸ் மூலம் மட்டுமே இது வேலை செய்யும். இதன் மூலம் ஸ்கூட்டர் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மொபைல் ஆப்சில் ஆன்சர் பேக் வசதியை பயன்படுத்தினால், ஸ்கூட்டரின் இடது மற்றும் வலது இன்டிகேட்டர்கள் எரிந்து, எந்த இடத்தில் நிற்கிறது என்பதை காட்டும். பெரிய பார்க்கிங்குகளில் ஸ்கூட்டரை நிறுத்தியவர்கள், சற்று தொலைவில் இருந்தே ஸ்கூட்டர் இருக்கும் இடத்தைக் கண்டறிய இது உதவும். ஷோரூம் விலை சுமார் ரூ.93,730. பேசினோ ஸ்கூட்டர்களில் குறைந்த விலை ஸ்கூட்டராகவும் இது உள்ளது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!