மொபைல் போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஷாவ்மி நிறுவனம், எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் ஷாவ்மி எஸ்யுவி7 என்ற எலக்ட்ரிக் காரை காட்சிப் படுத்தியுள்ளது. முன்புற பேனட் உள்ளிட்ட அம்சங்களைப் பார்க்கும்போது இது தோற்றத்தில் ஏறக்குறைய போர்ஷே டாய்குன் காரை போன்று காணப்படுகிறது. எல்இடி ஹெட்லைட், 21 அங்குல அலாய் வீல்கள், 16.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 56 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் காரில் எஸ்யு7, எஸ்யு புரோ, எஸ்யு7 மேக்ஸ் என 3 வேரியண்ட்கள் உள்ளன. துவக்கநிலை மாடலான எஸ்யு7-ல் 73.6 கிலோவாட் அவர் பேட்டரி பேக் இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கி.மீ தூரம் வரை செல்லும். எஸ்யு7 புரோவில் 94.3 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. 830 கி.மீ வரை செல்லும். இந்த இரண்டிலும் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 299 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எஸ்யுவி 7 மேக்ஸ்-ல் 101 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. இது அதிகபட்சமாக 673 பிஎஸ் பவரையும், 838 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காட்சிப்படுத்தல் மூலம், இந்த கார் இந்தியச் சந்தையில் வருவதை ஷாவ்மி உறுதிப்படுத்தியுள்ளது. சீன விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஷோரூம் விலை ரூ.24.78 லட்சம் முதல் ரூ.34.43 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மி எஸ்யுவி7
previous post