எழுத்து தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது; 245 உரிமையியல் நீதிபதி பணியிடத்துக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தமிழ்நாடு மாநில நீதித்துறை உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இப்பதவிகளுக்கான தேர்வுக்கு நேற்று முதல் வருகிற 30ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஜூலை 7ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு அக்டோபர் மாதம் 4 நாட்கள் நடக்கிறது.

அதாவது, அக்டோபர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மொழிபெயர்ப்பு தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் தாள்(சட்டம்) தேர்வு நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு இப்போது தான் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்