மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 164 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 10வது லீக் போட்டியில் குஜராத் – டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 போட்டியில் தோல்வி என புள்ளிபட்டியலில் 2வது இடத்தில உள்ளது.

இதே போல் 3 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறது. டெல்லி அணியுடனான இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் குஜராத் அணி களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் டெல்லி அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணித்தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக மேக்னா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு