குலதெய்வ வழிபாட்டுக்கு தடைகேட்டாரா கவர்னர்? தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவித்தனர். இதுபோன்ற கருத்துகள், ஆளுநர் மாளிகைக்கும், ஆளுநருக்கும் கெட்ட பெயர் உருவாக்குபவை. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு