உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று வெளியீடு

மும்பை: உலககோப்பை கிரிக்கெட் தொடர் (50ஓவர்) வரும் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் அடுத்த வாரத்தில் இருந்து இந்தியாவுக்கு வரத்தொடங்கும். வரும் 5ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து,-நியூசிலாந்து மோதுகின்றன.

அதற்கு முன் 10 அணிகளின் கேப்டன்கன் அறிமுகம் மற்றும் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனிடையே உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. டீம் இந்தியாவின் கிட் ஸ்பான்சரான அடிடாஸ் ஜெர்சியை வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு அடிடாஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இரவு 7:30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Related posts

இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது: வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்!

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா?: நாடாளுமன்றத்தில் துரை வைகோ கேள்வி