Tuesday, July 2, 2024
Home » உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மற்றும் 13, 18, 23, 27 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் போட்டி நடைபெறும் நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:
* விக்டோரியா ஹாஸ்டல் (கெனால் ரோடு) சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
* பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
* அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் எம், டி, வி ஆகிய எழுத்துகள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
* அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் பி, ஆர், ஆகிய எழுத்துகள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
* போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் எம், டி, வி ஆகிய எழுத்துகள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
* போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் பி, ஆர் ஆகிய எழுத்துகள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
* உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்
அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் வழியாக வரும் வானங்கள், காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

You may also like

Leave a Comment

thirteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi