உலக நாடுகளுக்கு அன்புமணி வலியுறுத்தல் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும்

சென்னை: உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தை கடந்துள்ள நிலையில், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் விளைவு தான் உலகின் சராசரி வெப்பநிலை கட்டுப்படுத்த வேண்டிய இலக்கான 16 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கைக் கடந்து 17.01 டிகிரி செல்சியசாக அதிகரித்திருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், புவிவெப்பமயமாதல் காரணமாக நாம் எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சி, பெரும் வெள்ளம், அனல் காற்று, அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, பொருளாதார பாதிப்பு, புதிய புதிய நோய்கள் ஆகியவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இந்த ஆபத்தை உணர்ந்து புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் விரைவுபடுத்த வேண்டும்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்