உலகில் 81 லட்சம் உயிரை காவு வாங்கிய காற்றுமாசு: இந்தியாவில் 21 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: யுனிசெப் உடன் இணைந்து அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ ஆராய்ச்சி நிறுவனமான ஹெல்த் எபெக்ட் இன்ஸ்டிடியூட், கடந்த 2021ம் ஆண்டில் காற்று மாசு பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ல் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட இறப்புகள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. அதிகபட்சமாக சீனாவில் 23 லட்சம் பேரும் இந்தியாவில் 21 லட்சம் பேரும் காற்று மாசால் இறந்துள்ளனர். இந்தியாவில் காற்று மாசால் இறந்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,69,400. பாகிஸ்தானில் 2.56 லட்சம் பேரும், வங்கதேசத்தில் 2.36 லட்சம் பேரும், மியான்மரில் 1.01 லட்சம் பேரும் இறந்துள்ளனர். கடந்த 2021ல் உலகளவில் நடந்த இறப்புகளில் காற்று மாசால் இறந்தவர்கள் 12 சதவீதம். உயர் ரத்த அழுத்தம், உணவு பழக்கவழக்கம், புகையிலை பயன்பாட்டை தொடர்ந்து இறப்புக்கான முக்கிய ஆபத்து காரணியாக காற்று மாசு இருந்து வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்