*உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவதே எனது அடுத்த இலக்கு
*இதற்காக சரியாக திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்கள் வகுத்து, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
*எல்லாம், இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.
* விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார். அவர் சிறந்த ரோல் மாடல் மட்டுமல்ல.
*ஏராளமான இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்து வருகிறார். அவர்களின் வளர்ச்சியில் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.
* உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைப் பற்றி இப்போது எதுவும் நினைக்கவில்லை.
* அந்தப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. அதனால், விரைவில் அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்குவேன்.
* என்னால் முடிந்தவரை எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் கூறினார்.